அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 மார்ச், 2012

வாகரையில் இளைஞர் கடத்தல்


ட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வானில் வந்த இனந்தெரியாதோரினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸில், உறவினர்கள் நேற்று புதன்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.
பால்சேனையைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்த கிசோத் (வயது 22) என்ற இளைஞரே கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இவ் இளைஞரின் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், கடத்தப்பட்ட இளைஞரின் தந்தையை விசாரித்ததாகவும் அவர் வீட்டில் இல்லாத நிலையில் இவ் இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG