அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 14 டிசம்பர், 2011

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கையெழுத்து வேட்டை


ந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பழ.நெடுமாறன் முதல் கையெழுத்தை இட்டு ஆரம்பித்து வைத்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி எண்ணற்ற தமிழ்ஆர்வலர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG