அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 டிசம்பர், 2011

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி


ரானியர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்குடன் 'ஒன்லைன் ஈரானிய தூதரகம்' ஒன்றினை ஆரம்பித்தது அமெரிக்கா. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டது. எனினும் ஆரம்பித்து சில மணித்தியாலங்களுக்குள் ஈரான் இவ் இணைய தூதரகத்தினை தனது நாட்டினுள் முடக்கியுள்ளது.
இதன்படி ஈரானுக்குள் இருந்து இவ் இணையத்தளத்தினை எவரும் பார்வையிட முடியாது. இதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. எனினும் ஈரானியர்கள் பிற இணையத்தளங்களின் ஊடாக அந்நாட்டு அரசின் தடைகளை மீறி இத்தளத்தினைப் பார்வையிட முடியுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் ஈரான் தனது மக்களின் தகவல் அறியும் உரிமையினைத் தடை செய்வதுடன், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகவல் நேற்றே வெளியாகிய போதும் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எனினும் தற்போது அத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG