அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!


மிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான். அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.
இப்போது உலகில் அரிதாகி வரும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்து வருகிறாராம் இந்த ஆஸ்கர் நாயகன். 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் கொண்ட இந்த ஆல்பத்தில், தமிழுக்கு இடமில்லை என்பது கொஞ்சம் வருத்தமான சமாச்சாரம்தான். இவற்றில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்றிப் பாடுகிறார். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை படமாக்கிய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளாராம். இந்த ஆல்பத்தை விரைவிலேயே வெளியிட இருக்கிறார்கள்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG