அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 26 நவம்பர், 2011

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; தடுப்பதற்காக யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு


மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதக் கொண்டாட்டங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிதொரு குழுவொன்றினால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினருடன் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சாதாரண தினமாகவே காணப்படப்போகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இடம்பெறப்போவதில்லை என்று என்னால் உறுதி கூற முடியும் என்றும் யாழ். கட்டளைத்தளபதி தெரிவித்தார். யாழ்ப்பாண நகரின் பல வீதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளைகளிலும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர் என்று மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG