2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரை 882பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் தலைமையிலான பொலிஸ் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய 875 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் இச்சம்பவங்களுடன் தொடர்புடையதான 849 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவற்றுள் குறித்த சில சம்பவங்கள் மாத்திரமே தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன என்றும் ஏனையவை பணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட கடத்தல் சம்பவங்கள் என்றும் தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டில் 398பேரும் கடந்த வருடத்தில் 237 பேரும் இவ்வருடத்தில் 247பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக