அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

இலங்கை யுவதிகளை விபசாரத்திற்காக மாலைதீவுக்கு கடத்தும் கும்பல் கண்டுபிடிப்பு


லங்கை யுவதிகளை விபசாரத்திற்காக மாலைதீவுக்கு கடத்திச் செல்லும் குழுவொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மிரிஹான பொலிஸ் நிலையத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினால் பன்னிப்பிட்டியவிலுள்ள விபசார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டபோது இக்கடத்தல் நடவடிக்கை கண்டறியப்பட்டது.
மேற்படி விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எச்.என்.பி. ஜயசிங்க இது தொடர்பாக சண்டே டைம்ஸுக்கு கூறுகையில், இவ்விபசார விடுதி கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நேர அவகாசம் பெற்றே உள்ளே அனுமதிக்கப்படுவதை பொலிஸார் தெரிந்துகொண்டதாக கூறினார். அதையடுத்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவ்விபசார வலையமைப்பில் இணைய விரும்பும் யுவதிபோன்று நடித்து இவ்விபசார நிலையத்துடன் தொடர்புகொண்டதாவும் அவர் தெரிவித்தார். அதன்பின் விபசார விடுதி முற்றுகையிடப்பட்டபோது அங்கிருந்து ஐந்து யுவதிகளும் அவர்களின் முகாமையாளரான 'பன்னிபிட்டிய ஆன்ரி' என அழைக்கப்படும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது ஒவ்வொரு மாதமும் சுற்றுலா விஸாவில் இரு பெண்கள் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டு அங்கு விபசாரிகளாக பணிக்கமர்த்தப்படுவது தெரியவந்தது. இப்பெண்கள் தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக ஒவ்வொரு தடவையும் ஆண் ஒருவரும் அவர்களுடன் அனுப்பப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பி வருவார் என இன்ஸ்பெக்டர் ஜயசிங்க கூறினார். விபசாரத்திற்காக பெண்களை மாலைதீவுக்கு கடத்தும் நடவடிக்கை கடந்த 6 வருடங்களாகஇடம்பெற்று வந்துள்ளதாகவும் அவர்கூறினார். பன்னிபிட்டியவில் 6 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டபோதிலும் இந்நடவடிக்கையில் பரந்த வலையமைப்பொன்று செயற்படுவதாக தெரியவந்துள்ளது. நபர் ஒருவர் 19 வயதானதனது மனைவியையும் இவ்விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் ஜயசிங்க கூறினார். கைது செய்யப்பட்டபெண்கள் காலி, கண்டி, அநுராதரபுரம், மஹியங்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG