மே ற்குலக நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. எனவே நாடுதிரும்பியதும் சம்பந்தன் குழுவினரின் பாராளுமன்ற உறுப்புரிமையினை அரசாங்கம் பறிக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “அமெரிக்கா, கனடா உட்பட மேற்குலக நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கூட்டமைப்பினர் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனர். இதனடிப்படையில் அரசியலமைப்பை மீறிய தேசத்துரோகிகளாக கூட்டமைப்பினர் கருதப்படுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக