அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2011

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரண தண்டனை ரத்து செய்யப்படுவதை எதிர்க்கவில்லை:தமிழக அரசு


ந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுவிக்க வேண்டும் என்று மேற்படி மூவரும் கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேற்படி தகவல் வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த மனு கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி மூவரையும் தூக்கிலிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தினால் 8 வார கால இடைக்காலத் தடை உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் மேல்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் வெங்கட் என்பவர் சார்பில் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த மேல்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG