அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

மஹாயான பௌத்த ஆலயத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்த பக்தர்கள்

கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் ஜப்பானிய பௌத்த பிக்கு ஒருவராலும் இரு சாதாரண நபர்களாலும் நடத்தப்படும் 'மஹாயான பௌத்த' ஆலயத்தில் உண்மையான பௌத்தம் குறித்து கற்றுக்கொள்வதற்காக 25 பக்தர்கள் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை அந்த ஆலயத்திற்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பௌத்தத்தை மதிப்பிறக்கும் முயற்சிகளை தவிர்ப்பதற்காக இந்த ஆலயத்தின் பதிவை இரத்துச் செய்யுமாறு பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு கடிதமொன்றில் கோரியிருப்பதாக கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.டி.ஐ. குலசேகர நீதிமன்றில் தெரிவித்தார். குறித்த 'ஆலயத்திற்கு' எதிராக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை தாம் நாடாளவுள்ளதாக பொலிஸார் கூறினர். ஜப்பான் சீனாஇ கொரியாஇ தாய்லாந்து முதலான நாடுகளில் மஹாயான பௌத்தம் பின்பற்றப்படுகிறது. இலங்கைஇ பர்மாஇ தாய்லாந்து போன்ற நாடுகளில் தேரவாத பௌத்தம் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG