அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் ஏமாற்றிவிட்டார் - வைகோ


மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலவே, இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார், என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூவர் தூக்கு தண்டனை ரத்து கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜரான வைகோ, பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ள மனுவைத் தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறியுள்ளது; இதற்கு, மூவரையும் தூக்கில் போடுங்கள் என்பதுதானே பொருள். தூக்கு தண்டனையை எதிர்க்கும் பொதுமக்களின் கருத்து பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. அப்படியானால் ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத்தை ஏமாற்றத்தானே? இந்தப் பிரச்னையில் தமிழக மக்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏமாற்றுவதைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் ஏமாற்றுகிறார்' என்றார் வைகோ.

0 கருத்துகள்:

BATTICALOA SONG