அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 6 அக்டோபர், 2011

தந்தையை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்குள்ளான தொலைக்காட்சி நடிகை அனுஷ்கா பிணையில் விடுதலை

னது தந்தையை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை தொலைக்காட்சி நாடக நடிகையான அனுஷ்கா சொனாலி சயக்காரவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் அனுமதித்துள்ளார்.
தன்னை மகள் தன்னை அச்சுறுத்தி ஒரு லட்சம் ரூபா பணத்தை பெற்றதாகவும் மேலும் ஒரு லட்சம் ரூபா பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அந்நடிகையின் தந்தை கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் 400,000 ரூபாவை தனது மகளுக்கு வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார். நோயாளியான பணம் கோரி தனது மகள் விடுக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக தான் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சந்தேக நபர் விபசார விடுதியிலிருந்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அத்தந்தை கூறியுள்ளார். மேற்படி நடிகை 50,000 ரூபா பணத்தை பெறுவதற்கு வந்தபோது தந்தை கொடுத்த முறைப்பாட்டையடு;த்து கொம்பனித்தெருவில் வைத்து நடிகையை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபரான நடிகை அனுஷ்கா சொனாலி சயக்கார கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 4000 ரூபா ரொக்கப்பிணையிலும் 25,000 ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் லங்கா ஜயரட்ன அனுமதித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG