அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 13 அக்டோபர், 2011

மகன்-மகளை ஆசிட்டில் போட்டு கொல்வதாக மிரட்டல்: நீதிபதியிடம் சங்கரராமன் மனைவி பரபரப்பு புகார்


னது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு உருத் தெரியாமல் அழித்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக, கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் மனைவி பத்மா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் தந்துள்ளார்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை விசாரணை புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந் நிலையில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று பேரம் பேசியதாக ஜெயேந்திரருக்கு எதிராக ஒரு தொலைபேசி உரையாடல் டேப் விவகாரம் வெடித்தது. இந் நிலையில் சங்கரராமன் மனைவி பத்மா இந்த வழக்கில் தன்னை பொய் சாட்சி சொல்லுமாறு கூறி மிரட்டுவதாக தலைமை நீதிபதியிடம் பரபரப்பான புகாரை கூறியுள்ளார். பத்மா சார்பில் அவரது பிரதிநிதி ஒருவர் கடந்த 29ம் தேதி தலைமை நீதிபதியிடம் இந்தப் புகார் தரப்பட்டுள்ளது. அதில் பத்மா கூறியிருப்பதாவது: நான் இந்த வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு நான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே என்னை மிரட்டினார்கள். எனது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு கொன்று உடல் தெரியாமல் செய்து விடுவோம் என்று மிரட்டினர். பெரும்பாலான சாட்சிகள் மிரட்டப்பட்டோ அல்லது பணம் கொடுத்தோ போலீஸ் தரப்பில் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG