அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 15 அக்டோபர், 2011

கொழும்பு மாநகர அதிகார சபை அரசியல் கலந்துரையாடல்களில் மாத்திரரே : ஏ.ஜே.எம். முஸம்மில்


கொழும்பு மாநகர சபையை விசேட அதிகார சபையாக மாற்றுவதென்பது தற்போது அரசியல் கலந்துரையாடலுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாக கொழும்பு மாநகர மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இதை எவ்வாறு, எப்போது செய்வது என்பது குறித்து யாரும் யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். 'உறுதியாக திட்டங்கள் முன்வைக்கப்படும்போது அதை நாம் எதிர்த்து நிறுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை, மீன் சந்தையை பேலியகொடையிலிருந்து முந்தைய இடத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படும் என்ற ஊகங்கள் குறித்து கேட்டபோது, இது குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்னர் நகரின் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்தின் திட்டங்களை கருத்திற்கொள்ள வேண்டும் என்றார். 'நகரின் அபிவிருத்திக்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன. ஆனால், தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அரசாங்கத்தினால் வரையப்பட்ட திட்டங்களையும் நான் கருத்திற்கொள்ள வேண்டும்' என அவர் கூறினார். விஹாரமதேவி பூங்காவை நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்கும் என்ற செய்திகள் குறித்து கேட்டபோது, அப்படி செய்வதில் சட்டப்பிரச்சினைகள் இருக்கும் என ஏ.ஜே.எம். முஸம்மில் கூறினார். 2001 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இதைச் செய்ய முயன்றபோது நீதிமன்றம் அந்நடவடிக்கையை நிராகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG