அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 18 அக்டோபர், 2011

கள்ளக் காதலால் அடி வாங்கிய உதயன் ஊடகவியலாளர் சுவிஸில் அரசியல் தஞ்சம்!


மிழ்த் தேசிய நாளிதழ் என மகுடம் சூடிக் கொண்ட யாழ்ப்பாணப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர் என அண்மைய நாட்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் இதன் உண்மைத் தன்மை என்ன? எதற்காக இவர்கள் தாக்கப்பட்டனர் என அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதுவும் தெரியாது. காலையில் பத்திரிகை பார்த்து விட்டு 'வயிற்றுப் பிழைப்புக்காகப் பேப்பர் கொம்பனியில வேலை செய்யுறதுகல ஏன் உந்தக் காடேறிகள் அடிக்கிறாங்கள்" என்று எத்தனையோ தமிழ் மக்கள் மனம் கலங்கியிருப்பார்கள்? அத்தனை தமிழ் மக்களையும் ஏமாற்றிவிட்டு அடுத்த கணத்தில் சுவிஸ்சர்லாந்துக்கு விமானத்தில் பறந்தனர் உதயன் ஊடகவியலாளர்கள். சமய பாடம் கற்பிக்கும் ஆசானான எஸ்.கவிதரன் தனது பகுதி நேரத்தில் உ(ஊத்)தயனின் ஊடகவியலாளன். அந்த ஊடகவியலாளன் தான் கற்பிக்கும் மாணவியிடம் காதல் லீலை புரிய, மாணவியின் உறவினர்கள் ஊடகவியலாளனை வீதியில் வைத்து முழங்காலுக்குக் கீழ்த் தாக்கினர். அதாவது யுத்த விதிமுறைகளுக்கமைய தமது மனிதாபிமானத்தை நிலைநாட்டியே அம் மாணவியின் உறவினர் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வி கற்பிக்கும் ஆசான் மாணவனுக்கு வழங்கும் தண்டனை போலே இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இத் தாக்குதல் சம்பவத்தை மெருகூட்டி தமது அரசியல் எதிர்க்கட்சி மீது தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டியது உதயன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய எஸ்.கவிதரன் (வயது-34) தற்போது சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றார். இதற்குத் துணை போனதா உதயன்? அரசியல்வாதி, வியாபாரி என பல நாமங்களைக் கொண்டும், தமிழ்த் தேசியத்தைக் கொண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் உதயன் பத்திரிகையின் முதலாளித்துவம், எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு சுவிஸில் தஞ்சம் கோர வைத்தது என்பது தெரியாத தகவல்? இது இவ்வாறிருக்க குகநாதன் என்ற உதயன் ஊடகவியலாளரும் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோரியுள்ளார். இதற்கும் இப் பத்திரிகை நிர்வாகத்திற்கும் தொடர்புகள் இருக்கலாம் என்பது சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்ததும் தமது நிலையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள அரசியல் எனும் சாக்கடைக்குள் நுழைந்தது அதன் நிர்வாகம். யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நிறுவனத்தை நடத்தி அப் பகுதி மக்களின் பணத்தினைச் சுரண்டி தாம் குடியிருக்கும் தென்பகுதிக்குக் கொண்டு செல்கின்றது உதயன் பத்திரிகையின் முதலாளித்துவம்.  அத்துடன் இப் பத்திரிகையில் பணியாற்றும் மேலதிகாரிகள் தமது சொந்தத் தேவைகளுக்காகவும் அதன் நிர்வாகம் தனது அரசியல் தேவைக்காகவும் ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்

எனவே இனிவரும் காலங்களில் எத்தனை குகநாதன்கள், எத்தனை கவிதரன்கள் முளைக்கப் போகின்றார்களோ தெரியவில்லை?

உதயன் பத்திரிகையின் நிர்வாகம் தான் செய்யும் ஒவ்வொரு பிழைகளையும் பூனை கண்மூடிப் பால் குடிப்பது போன்றது.

எனவே இனிவரும் காலங்களில் அதன் நிர்வாகம் செய்யும் அத்தனை தவறுகளும், தமிழ் மக்களை ஏமாற்றும் கபட நாடகங்களும் தவிடுபொடியாக்கப்படும்.

அவர்களின் நயவஞ்சகத்தனங்கள் அனைத்தையும் நாம் இவ்விடத்தில் பிரஸ்தாபித்துக் கொண்டியிருப்போம்.

தமிழ் மக்களைத் தான் கொண்டுள்ள பத்திரிகைப் பலத்தினால் ஏமாற்றிப் பணபலத்தைக் கொள்வனவு செய்து, தமிழ் மக்களை ஏமாற்றும் அவர்களின் வித்தைகள் அனைத்தும் தவறாது இவ்விடத்தில் பிரசுரிக்கப்படும்.






2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

www.eelavenkai.blogspot.com

venkai சொன்னது…

mudinthaal unta inaiyaththil inaiththu paaru....
www.eelavenkai.blogspot.com

BATTICALOA SONG