அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 18 அக்டோபர், 2011

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பொறுப்பற்ற கூற்றுக்கு கண்டனம்


யா ழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் இணையத் தளங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளமை கண்டனத்திற்குரியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆதரவு தேட சிவஞானம் சிறீதரன் முற்பட்டுள்ளார். இச்சமயம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பத்மினி சிதம்பரநாதன் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நடத்திய இரகசிய ஆலோசனையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தனபாலசிங்கமும் சமூகமளித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரகசிய ஆலோசனையில் ஈடுட்பட்ட அணியினருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தம்மத்தியில் வலுவடைந்து வரும் கருத்து முரண்பாடுகளையும் பிளவுகளையும் பூசி மெழுகும் நோக்குடன் இத்தாக்குதல் சம்பவத்தை திசை திருப்பி ஈ.பி.டி.பி.யின் மீது பழிபோட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முயற்சிக்கின்றார். இத்தகைய கோழைத்தனமான தாக்குதல் சம்பவங்களைக் கண்டிப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றோம். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதல் சம்பவத்தினை கண்டிப்பதோடு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பொறுப்பற்ற கருத்துக்கும் எமது கண்டனத்தை வெளிப்படுத்துகின்றோம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG