அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 18 அக்டோபர், 2011


சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்பதை தள்ளி வைக்குமாறு கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக புதன்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசின் வக்கீலுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் தனி கோர்ட்டில் பல காலமாக நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் முறையாக ஜெயலலிதா வருகிற 20ம் தேதி நேரில் ஆஜராகவுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே நேரில் வர சம்மதித்தார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தனி நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றி நேற்றுதான் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். 20ம் தேதியன்று பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதி்மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று கோர்ட் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திடீரென ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புது மனு ஒன்று தாக்கல் செய்யபப்பட்டது. அதில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. எனவே தன்னால் அங்கு போக முடியாத நிலை உள்ளது. எனவே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார். ஆனால் இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக புதன்கிழமைக்குள், ஜெயலலிதாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் ஜெயலலிதா பெங்களூர் போக வேண்டுமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG