அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் புகைப்படக்கருவி

லகின் முதலாவது மிகச் சிறிய விற்பனைக்கான புகைப்படக்கருவியினை அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது.
வெறும் 26 மில்லி மீற்றர் அளவான இக் கருவியின் மூலம் 2 மெகா பிக்ஸல் வரையான புகைப்படத்தினைப் பிடிக்கமுடியும். மேலும் இதன் மூலம் வீடியோ பதிவு மேற்கொள்ளவும் முடியும். இதன் நிறை 26 கிராம்களே ஆகும். இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஹமாசர் ஸ்கிலிமெர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் விலை 99.95 அமெரிக்க டொலர்களாகும். உருவத்தில் சிறிதெனினும் செயற்பாட்டில் இக்கருவி பெரிய புகைப்படக்கருவிகளை ஒத்ததெனவும், சந்தைக்கு வரும்போது பெரும் வரவேற்பைப் பெறுமெனவும் இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த மே மாதம் இஸ்ரேலைச் சேர்ந்த மெடிகஸ் நிறுவனம் 0.99 மில்லி மீற்றர் அளவிலான புகைப்படக்கருவியொன்றை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG