அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

பெங்களூரில் கல்லூரி மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக பேஸ்புக் காதல்

பே ஸ்புக் செய்தியை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் ஐ.ஐ.எம். மாணவியின் காதலன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(22). அவர் பெங்களூர் ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார். அவருடைய காதலன் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த மர்மு துக்கம் தாங்க முடியாமல் உடனே விடுதி அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே தகராறு நடந்ததையும். இதையடுத்து தான் அவர் பேஸ்புக்கி்ல் மாலினியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கில் மாலினியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மாலினி தற்கொலை செய்து கொண்டதையடு்தது அந்த நபர் தனது பேஸ்புக் கணக்கினை அழித்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. _

0 கருத்துகள்:

BATTICALOA SONG