அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்த ஆஸி. கீறின்ஸ் கட்சி வலியுறுத்தல்

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சி கோரியுள்ளது. இலங்கையின் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்வரை இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டும் என அக்கட்சி வலியியுறுத்தியுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்காக ஆதாரங்களைத் திரட்டுவதில் ஈடுபட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோருக்கிடையில் நாளை ஆரம்பமாகவுள்ள வட்டமேசை மாநாடொன்றின்போது பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான பிரசாரத்தை அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி ஆரம்பிக்கவுள்ளது. முனித உரிமை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் இலங்கையில் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பதற்கு தான் கோரக்கூடும் என கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG