அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 செப்டம்பர், 2011

ரஞ்சன் ராமநாயக்கமீது வழக்கு தொடர்ந்த போலி ஆசிரியை விளக்கமறியலில்

போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி 20 வருடங்கள் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் சாலிய அபேரத்ன நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு விளக்கமறியல் உத்தரவுக்கு உட்பட்ட ஆசிரியையே, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேற்படி ஆசிரியை போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி 20 வருடங்கள் ஆசிரியையாக கடமையாற்றிவுள்ளார் என்பதுடன் அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என குறித்த ஆசிரியை வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG