அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 செப்டம்பர், 2011

கேரளாவில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகம்

மிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களிலுள்ள 34 இலங்கையர்களை படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் ஐவருக்கும் கேரளாவைச் சேர்ந்த நால்வருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலத்தில் தொடர்பிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'இந்த 9 பேருக்கும் கடந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ.யுடன் தொடர்பிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் காளமேஸரி பொலிஸ் முகாமில் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சந்தேகத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் கியூ பிரிவு பொலிஸார் அவர்களை விசாரிக்கும்வரை எதையும் உறுதிப்படுத்த முடியாது' என கேரளாவின் எர்ணாகுளம் பொலிஸ் அத்தியட்சகர் ஹர்ஷித அட்டாலுரி கூறினார். மீட்கப்பட்ட இலங்கையர்கள் அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு அனுப்பப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை அதிக முகாம்களின் சூழ்நிலை திருப்திகரமாக இல்லையெனவும் தாம் அங்கிருந்து வெளியேற விரும்புவதாகவும் அதிகளில் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றவியல் பிரிவு விசாரணை அதிகாரிளக் தெரிவித்துள்ளனர். மேற்படி இலங்கை அதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் இந்திய ரூபாவை முகவர்கள் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG