அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

ஐ.நா. வளாகத்தில் இலங்கை கொலைக்களங்களுக்கு எதிரான ஆவணப்படம் திரையிடப்பட்டது

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் 58ஆவது டிவிசன் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு அந்த அறிக்கை தவறானது என்றும் தாக்குதல் நடத்தியது 53ஆவது டிவிசன் என்றும் பதிலளித்துள்ளார்.
சனல் 4 வெளியிட்டிருந்த இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்குப் போட்டியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தயாரித்த "Lies Agreed Upon" என்ற ஆவணப்படம் ஐ.நா. வளாகத்தில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர். சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட வெள்ளைக் கொடி விவகாரத்தில் பாலித கொஹனவின் பங்கு என்ன என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அவர் விஜய் நம்பியாரிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார். இது பற்றி தாம் விஜய் நம்பியாரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. ஆனால் அல்ஜெசீராவுக்கு விஜய் நம்பியார் அளித்துள்ள செவ்வி ஒன்றில், அப்போதைய வெளிவிவகார செயலர் பாலித கொஹனவுடன் பேசுமாறு கூறியிருந்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இது தொடர்பில் நேற்று முன்தினம் பாலித கொஹனவிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, இராணுவத்தில் தனது பங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு விடுதியில் விஜய் நம்பியாரைச் சந்தித்துப் பேசியதை ஒப்புக்கொண்ட கொஹன, அந்த உரையாடலை நினைவுபடுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான ஷெல் தாக்குதலில் 58ஆவது டிவிசன் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு தனது 58ஆவது டிவிசன் பற்றி அந்த அறிக்கையில் கூறப்படவில்லை என்று முதலில் பதிலளித்திருந்தார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. இதையடுத்து இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் 55ஆவது, 58ஆவது டிவிசன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பந்தியை உரத்து வாசித்துக் காண்பித்தார். இதையடுத்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அந்த அறிக்கை தவறானது என்றும் அது 53ஆவது டிவிசன் என்றும் கூறியதுடன் 55ஆவது டிவிசன் அப்போது வேறொரு இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது அது ஐ.நா. அறிக்கை அல்ல என்று பாலித கொஹன வாதிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG