அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களையும் இராணுவத்தினரையும் அகற்ற வேண்டும்: த.வி.கூ

டக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களையும் இராணுவத்தினரையும் அகற்ற வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த தேசிய மாநாடு நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு வீதியிலுள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம.பி.க்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் எம்.பி.யும் ரெலோ அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், உட்பட பலரும் கலந்துகொண்டனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG