அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மறப்போம் அல்லது மன்னிப்போம்” - விடுதலைப்புலிகளின் கொடுமையான படுகொலை தொடர்பாக மீள்பார்வை

து ஒரு பாரிய துன்பம், பயங்கர வரலாற்று துன்பம், நாம் இதையிட்டு பெரிதும் வருந்துகின்றோம். இதை பெரும்தன்மையோடு இந்திய அரசும் மக்களும் கடந்த கால நினைவுகளை பின்போட வேண்டும்” என்டன் பாலசிங்கம்(2006 ஜூன் 27)
இவ் அனுதாபமானது முன்னாள் இந்திய முதலமைச்சரின் 15ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு காந்தி குடும்பதிற்கு பிரபாகரன் சார்பாக என்டன் பாலசிங்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பானது, அப்பாவி பொதுமக்கள், அரவியல்வாதிகள், சிறுவர்கள் மற்றும் நிராயுதபாணியான பொலிஸார் ஆகியோரின் கொடூர கொலைக்கு ஒருகாலமும் பொறுப்பு கூறியது இல்லை. எதிர்பாராதவகையில் தமது நேரடி பங்கேற்பை ராஜீவ் காந்தியின் படுகொலையில் பொறுப்பேற்று மன்னிப்பு கோரினர்.
பாதுகாப்பு அவதானிகளின் கருத்துப்படி, இச் செயற்பாடாடானது பயங்கரவாதிகள் நாடுகடந்த பிராந்தியங்களுக்கு மேற்கொண்ட முதலாவது பயங்கர செயற்பாடாகளின் பரிமாணமாகும். பின்னர், 1993ஆம் ஆண்டு மே 01ஆம் திகதி கொழும்பில் மே தின கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இப் படுகொலையானது அன்று செய்தித் தலையங்கங்களாக வெளியானதே தவிர, தற்போது பல எதிர்ப்புக்களை தெரிவிக்கின்ற சர்வதேச சமூகங்களோ அல்லது மனிதயுரிமை அமைப்புகளோ இது தொடர்பாக எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.
அன்று முதல், இலங்கை பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் வரை, இப் பயங்கரவாதிகள் தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் தமிழ் தலைவர்கள் மீது மேற்கொண்ட பல படுகொலை தாக்குதல்கள் தோல்வியடைந்திருக்கும் அதேவேளை 19 முக்கிய தலைவர்களை இவர்கள் கொலை செய்யதுள்ளனர். காலஞ் சென்ற இலங்கையின் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் கொலை செய்யப்பட்டது போன்று, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷமன் கதிர்காமர் அவர்களும் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளை உலகு கண்டுகொள்ளாமல் இருந்தமை இப் படுபயங்கரவாதிகளுக்கு பச்கைக்கொடியாக இருந்தது. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானத்தை மீறி அப்பாவி மக்கள் மீது இவர்களது கொடூர செயற்பாடுகளை வெளிப்படுத்தினர். இவர்கள் மேற்கொண்ட அட்டூழியங்கள் ஹிட்லரின் காலத்தில் இடம்பெறதாத கொடுமைகளை விட மோசமாக இருந்தது.
இருந்தும், இலங்கை அரசானது சரியான தருனத்தில் இக் கொடுமைகளுக்கு எதிராக போராடி மாபெரும் ஒரு அதிசயக்கும் வெற்றியைக்கண்டு சமாதானத்தையும், அமைதியையயும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் கொண்டுவந்தது. தமது கடந்த கால இன்னல்களையும் கொடுமைகளையும் “மன்னிப்போம் அல்லது மறப்போம்” என்ற நிலையில் தற்போது நாட்டிலுள்ள 20மில்லியன் மக்களும் மிகவும் நிம்மதியாகவும், சந்தோசமாவும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர். 
பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG