அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆஸி எதிர்ப்பு

லங்கையைப் பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரிலிருந்து நீக்க வேண்டுமென அவுஸ்திரேலிய செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆஸி அரசும் எதிர்க்கட்சியும் எதிராக வாக்களித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட்டர் லீ ரெஹ்னொன் (Lee Rhiannon) இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டுமென அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் உறுப்புரிமை இடைநிறுத்தி வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பிலான பிரச்சார நடவடிக்கைகளை கிறீன் கட்சி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை எதிர்வரும் மாதம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG