அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

இரு விமானங்களால் மட்டும் செப். 11 இரட்டைக் கோபுர தகர்ப்பை மேற்கொண்டிருக்கமுடியாது: ஈரானிய ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து

மெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரு விமானங்கள் மட்டும் மோதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு பொறியியலாளர் என்பதனால் இரண்டு விமானங்களால் மட்டும் இவ்வாறானதொரு பாரிய சேதத்தினை ஏற்படுத்தமுடியாதெனவும் வேறு ஏதாவது திட்டமிடப்பட்ட வெடிப்பு சம்பவமும் அதனோடு தொடர்புபட்டிருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்காதான் இதனை நடத்தியதாக அவர் கருத்தெதனையும் குறிப்பிடவில்லை. ஐ.நாவின் பொதுக் கூட்டத்திற்காக தற்போது நியூயோர்க் சென்றுள்ள அவர் ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலின் போதே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல வெளியிட்டு புகழ் பெற்றுள்ள அஹமட் நிஜாட்டின் இக்கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG