அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

புலிகளின் நிதி சேகரிப்பை முறியடிக்க புதிய சட்டங்கள்

வெளிநாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் நிதிசேகரிப்பு, பணச்சலவை ஆகிய விவகாரங்களை கையாளும் வகையில் இரண்டு சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டங்கள் ஐக்கிய நாடுகளின் சிபாரிசின் அடிப்படையில் அமைந்தவை என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார். எஞ்சியுள்ள எல்.ரீ.ரீ.யீனர் வெளிநாடுகளில் பணம் சேகரிக்கின்றனர். இந்த சட்டங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு வலுவளிக்கும் என அவர் கூறினார். இந்த சட்டத்தின்படி மேற்படி குற்றங்களை புரிவோரின் சொத்துக்களை, நீதிமன்ற கட்டளையின்றி பொலிஸாரால் கைப்பற்ற முடியும்.
இந்த விவாதத்தில் கலந்துக்கொண்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நடந்தன என வினவினார்.19 கப்பல்கள் 4200 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருந்தன. அவைக்கு என்ன நடந்தது எனவும் வினவினார். 'அரசாங்கம் கேபிக்கு ஹெலிகொப்டர் வசதியை வழங்குகின்றது. ஆனால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையிட்டுள்ளது. இதுதான் நீதியா?' என அவர் கேட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG