அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

லக்ஷர் ஈ ஜான்வி தலைவர் வீட்டுக்காவலில்

பா கிஸ்தானில், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதலை திட்டமிட்டவர் எனக் கூறப்படும் லக்ஷர் ஈ ஜான்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
மாலிக் இஷாக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. எனினும் இவர் அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவர் என கருதப்படுவதால் இவரை 10 நாட்கள் வீட்டுக்காவலில் வைக்கும்படி பஞ்சாப் மாநில அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது. தடைசெய்யப்பட்ட லக்ஷர் ஈ ஜான்வி அமைப்பு பலுசிஸ்தான் மாநிலத்தில் 29 ஷியா சிறுபான்மையினரின் படுகொலைக்கு தானே பொறுப்பு என அறிவித்தததையடுத்து இவரை காவலில் வைக்கும்படி பஞ்சாப் மாநில அரசு கட்டளை பிறப்பித்தது. மாசிக் இஷாக் இஸ்லாமின் பெயரில் வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் பேச்சுக்களை ஆற்றிவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 70 ஷியா பொதுமக்களை கொலை செய்ததாகவும் இவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG