இ லங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 379 ஓட்டங்கள் தேவையான நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 253 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
மஹேல ஜயவர்தன 105 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்தியூஸ் 95 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் இலங்கை அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ரியான் ஹரிஸ் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 4 ஆவது நாளில் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைக் ஹஸி இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி செப்டெம்பர் 8 ஆம் திகதி பள்ளேகல அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 3 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக