அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பெண்களுக்கு மட்டும் தனியான பஸ் சேவை

பெண்களுக்கு மட்டுமான தனியான பஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விசேட பஸ் சேவை நாளை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று சபையின் தலைவர் எம்.டீ. பந்துசேன தெரிவித்தார்.
இந்த விசேட பஸ் சேவை கொட்டாவைக்கும் புறக்கோட்டைக்கும் இடையில் முதலில் ஆரம்பிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 138 ஆம் வழித்தட இலக்கத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தச் சேவை, காலை 7.00 மணிக்கு கொட்டாவையிலிருந்தும் மாலை 4.45 மணியளவில் புறக்கோட்டையில் இருந்தும் ஆரம்பிக்கப்படும். இதவேளை, இச்சேவையைத் தொடர்ந்து ஏனைய வழித்தடங்களுக்கும் பெண்களுக்கான இவ் விசேட சேவை விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG