அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

போர் இடம்பெற்ற காலத்தில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை: கோர்டன்

போர் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் திருப்திகரமாக அமையவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மனிதாபிமான பணிகளிலிருந்து ஐ.நா விலகிக் கொண்டது. பொது இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துகள் வெளியிடப்படவில்லை. போர் இடம்பெற்ற காலத்தில் ஐ.நா.வின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் நடத்தப்படவில்லை. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருகின்றது. தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும், அவ்வாறான முயற்சி வெற்றியளிக்காது என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG