அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு பலமான ஆதரவு இருப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
'அமெரிக்க காங்கிரஸில் 30 இற்கும் அதிகமானோரைக் கொண்ட இலங்கைக் குழுவொன்று உள்ளது. அத்துடன் பல உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நாம் தோற்கடித்தமைக்கும் எமது அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்' என அவர் தெரிவித்தார்.
எனினும் சில தொண்டர் நிறுவனங்களும் புலம்பெயர்ந்த எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் சிலரும் இலங்கையின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக அவர் கூறினார். ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்க முடியாது என அவர் கூறினார்.
'இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க வர்த்தகர்கள் குழுவொன்று இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். உதாரணமாக போயிங் நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு விமானங்களை விற்பனை செய்யவுள்ளது. ஜோன் டீரே கெட்டபில்லர் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் காலூன்ற ஆர்வம் கொண்டுள்ளன. வேறு சிலர் சிறிய தொழிற்சாலைகளை அமைக்க விரும்புகிறார்கள். அமெரிக்காவின் முன்னணி ஹோட்டல் நிறுவனங்கள் பல ஏற்கெனவே இலங்கையில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன' எனவும் அவர் தெரிவித்தார்.
'இலங்கையில் சில பத்திரிகைகள் அமெரிக்கா எமக்கு ஆதரவில்லை என்பதுபோல் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் எமக்கு அமெரிக்காவில் பலமான ஆதரவு உள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக