அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 6 ஆகஸ்ட், 2011

35 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை அணி

வுஸ்திரேலிய அணியுடனான முதலாவது ருவென்ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
கண்டி பள்ளேகல அரங்கில் இன்று சனிக்கிழமைஇரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்இழப்பிற்கு 198 ஓட்டங்களைப்பெற்றது.
அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களைப் பெற்றார். இவற்றுள் 5 சிக்ஸர்கள் 12 பௌண்டரிகளும் அடங்கும் சர்வதேச ருவென்ரி 20 போட்டிகளில் அவர் பெற்ற முதலாவது சதம் இதுவாகும். என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தினேஷ் சந்திமாலும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குமார் சங்கக்கார 22 பந்துகளில் 30 ஓட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு163 ஓட்டங்களையே பெற்றது. அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக டேவிட் வார்னர் 31 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் தில்ருவான் பெரேரா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG