அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நிருபமா ராவுக்கு ஸ்ரீ சித்திரை திருநாள் விருது: அறக்கட்டளை அறிவிப்பு

வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் நிருபமா ராவ் ஸ்ரீ சித்திரை திருநாள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிருபமா ராவ் கடந்த 31-ம் தேதி வெளியுறவுத் துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விரைவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்கவிருக்கிறார்.
இந்நிலையில் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றியதை பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்ரீ சித்திரை திருநாள் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த தகவலை விருது வழங்கும் குழுவின் தலைவர் டிபி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
திருவிதாங்கூர் மன்னரின் நினைவாக ஸ்ரீ சித்திரை திருநாள் அறக்ககட்டளை இந்த விருதை வழங்கி வருகிறது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், விவசாய விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன், பாடகர் யேசுதாஸ் ஆகியோர் இந்த விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
நிரூபமா ராவ் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG