அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 ஜூலை, 2011

காவத்தை பெண்கள் படுகொலைகள்; மற்றொரு நபர் கைது

காவத்தை பகுதியில் பெண்கள் பலர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை காவத்தையில் வைத்து இன்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காவத்தை பகுதியில் 7 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் இருவரின் கொலையில் மேற்படி நபர் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் காவத்தை பகுதியை சேர்ந்தவராவர்.
மேற்படி கொலைகளையடுத்து பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்ததால் சந்தேக நபர் அப்பகுதியில் ஒளிந்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
2008 முதல் கடந்த ஜூன் 19 ஆம் திகதிவரை 7 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 45-60 வயதுக்கிடைப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களில் நால்வரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட ஒருவர் பொலிஸாரால் ஏற்கெனவே கைதாகியிருந்தார். அவற்றில் ஒரு கொலை தனிப்பட்ட பிரச்சினையின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மற்றொரு கொலையுடன் தொடர்பான நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG