அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 14 ஜூலை, 2011

அவசரமாக இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றிவிட முடியாது: ஜனாதிபதி

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவசர அவசரமாக மீள் குடியேற்ற முடியாது. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே மீள் குடியேற்ற முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதனையும் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுத்தால் மாத்திரமே வெற்றிபெற முடியுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

மக்கள் வங்கியால் முகாமைத்துவ பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட 227 பேருக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றியபோது, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் ஒரு சிலர் அரசாங்கத்தின் மீது குறை கூறுகின்றனர். இதனை அவசர அவசரமாக மேற்கொள்ள முடியாது. அவர்களது சொந்த இடங்களில் அம்மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வாழ்வதற்கு உகந்த சுற்றுப்புறச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே அம் மக்களை மீளக் குடியேற்ற முடியும். இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு உலக மாற்றங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.
எந்த ஒரு காரியத்தை மேற்கொண்டாலும் அதனை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். அப்போதே வெற்றி பெற முடியும். திட்டமிட்ட ரீதியில் யுத்தத்தை முன்னெடுத்ததன் காரணமாகவே எம்மால் வெற்றி பெற முடிந்தது. உலக பொருளாதார நெருக்கடியின் போதும் நாம் பலமாக இருந்தோம். இதற்கு திட்டமிடப்பட்ட எமது பொருளாதாரக் கொள்கையே காரணமõகும்.
நாடு உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதை வழங்குவதற்கு ஒரு போதும் பின்னிற்க வேண்டாம் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ, பட்டதாரிகளின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 1500 பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தமைக்கு இதுவே காரணமாகும் என்றார்.
இந்த நிகழ்வில் பிரதி நிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியேõரும் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG