அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 14 ஜூலை, 2011

சமூக நலத்திட்டத்திற்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மூக நலத்திட்டத்திற்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்றைய தினம் (12) இடம்பெற்ற யாழ். மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொண்டர் சேவை அடிப்படையில் பணியாற்றிய பணியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமைபுரியும் ஒவ்வொருவரும் மக்கள் நலன்சார்ந்தும் மேம்பாடு கருதியும் பணிபுரிய வேண்டும். அத்துடன் வாய்ப்புக்கள் ஏற்படுத்தி அதனை சரியாகப் பயன்படுத்தி எமக்காகவும் எமது சமூகத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் நலத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்திலேயே முழுமையடையும் என்றும் தெரிவித்தார்.



0 கருத்துகள்:

BATTICALOA SONG