கெபதிகொல்லாவ, ஹல்மில்லவெட்டிய பிரதேசத்தில் பொல்லால் தாக்கி கணவரை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது
.சம்பவத்தில் 43 வயதான லொகு கமகே சரத் குமார என்பவரே கொல்லப்பட்டவராவார். இவருக்கும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த படுகொலைக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமாக பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
உயிரிழந்தவரசடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபதிகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 20 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக