அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 20 ஜூலை, 2011

இளம் ஆசிரியை மீது பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; அப்புத்தளையில் சம்பவம்

ப்புத்தளை ஹல்துமுல்லை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த இளம் ஆசிரியையொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்ததால், எரிகாயங்களுக்குள்ளான நிலையில் அவ் ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஹல்துமுல்லை வேஎலிய சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆசிரியர் மீதே இவ்வாறு பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடமை நிமித்தம் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மேற்படி ஆசிரியை மீது அங்கு வந்த இளைஞரொருவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அயலவர்கள் விரைந்து தீயை அணைத்து ஆசிரியையை தியத்தலாவ அரசினர்; வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஆசிரியையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கைதுசெய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG