அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 11 ஜூலை, 2011

யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு

டக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய மில்லர் ஞாபகார்த்தமாக சிலையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டின் பின்னர். குடாநாட்டினில் இருந்த பெரும்பாலõன நினைவுச் சின்னங்கள், இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் மில்லர் ஞாபகார்த்த சிலையும் இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் முதல் கரும்புலித் தாக்குதலின் நினைவு எச்சமாக, சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்திருந்தது. அக்கட்டிடத் தொகுதியையே இடித்து அகற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் படையினரால் போர்வெற்றியை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுவரும் நினைவு எச்சங்கள் பற்றி அவர் எதுவுமே கூறியிருக்கவில்லையென தெரியவருகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG