அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 14 ஜூலை, 2011

மும்பையில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு-10 பேர் பலி-70 பேர் காயம்

மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 70 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

6.45க்கு முதல் குண்டுவெடித்தது
மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

மாலை 6.45 மணியளவில் முதல் குண்டுவெடித்தது. தாதர் மேற்குப் பகுதியில், கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு காரில் இந்த குண்டு வெடித்தது.

அடுத் ஜவேரி பஜார் பகுதியில், கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. இதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் 3வது குண்டுவெடித்தது.

இந்த மூன்று சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக ஒரு தகவலும், 15 பேர் காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன.

இருப்பினும் 70 பேர் வரை காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்புத் தகவல் தெரிவித்தது.

மும்பை முழுவதும் உஷார் நிலை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

தயார் நிலையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள்

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

என்ஐஏ குழு மும்பை விரைகிறது

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல்-உள்துறை அமைச்சகம்

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில டிஜிபியைத் தொடர்பு கொண்டு பேசினார்.
Read: In English
இதையடுத்து இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG