அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 ஜூன், 2011

புதிய தலைமைச செயலக விசாரணைக் கமிஷனை சந்திப்போம்-ஸ்டாலின்

புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து அமைக்கப்படவிருக்கும் விசாரணைக் கமிஷனை சந்திப்போம் என்று சட்டமன்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக அரசின் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை இந்த அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு திமுக சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசின் திட்டங்கள் சிலவற்றை, வேறு பெயரில் மாற்றிச் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.

ஒரு அரசு கடந்த கால திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றினால்தான் திட்டத்தின் பயன் மக்களை முழுமையாக சென்றடையும். வளர்ச்சி பணிகள் நேர்கோர்ட்டில் செல்ல வேண்டும். ஆனால் கவர்னர் உரையில் திட்டங்கள் நேர்கோட்டில் செல்லாமல் குறுகிய பாதையில் கோணல்மாணலாக செல்கின்றன. இதனால் மக்களுக்கு உரிய பலன் போய் சேராது.

ஆளுநர் உரையில் வளர்ச்சித் திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் இல்லை.

ஒரு அறுசுவை உணவு என்பது சாப்பாடு குழம்பு, கூட்டு, தயிர் போன்ற பலவகை கொண்டதாகும். ஆனால் கவர்னர் உரையில் கூட்டு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே இது அறுசுவை உணவாகாது. கவர்னர் உரையில் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்றார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் போவதாகவும் அரசு முடிவுவெடுத்து இருப்பதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு,

திமுகவைப் பொறுத்தவரை எத்தனையோ விசாரணை கமிஷன்களை சந்தித்துள்ளது. அதேபோல் இதையும் சந்திப்போம் என்றார்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப் போவதாக கூறியுள்ளனர். விசாரணைக் கமிஷனை திமுக சந்திக்கும் என்று கூறினார் ஸ்டாலின்.

வளர்ச்சி திட்டங்கள் இல்லை-ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரையில் வரவேற்கப்பட வேண்டிய சில திட்டங்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

கேபிள் தொலைக்காட்சி சேவை அரசுடைமையாக்கப்படுவது, தமிழக நதிகள் இணைப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மகளிருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பு, மெட்ரோ ரயில் திட்டத்தில் கவனம் செலுத்தாதது மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்க திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

கவர்னர் உரை திருப்தியாக இல்லை-காங்கிரஸ்:

காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத் கூறுகையில், கவர்னர் உரை நாங்கள் எதிர்பார்த்தது போல்தான் உள்ளது. அதில் உள்ள சில கருத்துக்களை வரவேற்கிறேன். சில அறிவிப்புகள் திருப்தியாக இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு குறித்து சட்டமன்றத்தில் விரிவாக பேசுவோம் என்றார்.

உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார்:

கவர்னர் பர்னாலாவின் உரைக்குப் பின் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜெயக்குமார் வாசித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG