அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 ஜூன், 2011

கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பினர் முடமாக்கப்பட்டுவிட்டனரா?

ருதலைப் பட்சமான நடைமுறைகளினால் கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் காணிப் பிரச்சினையை த் தீர்க்க முடியாது.மாவட்டத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கும் உரிய தீர்வினைக் காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா..துரைரெட்ணம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியாரால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்துவருவதை நாம் அறிவோம்.இப்பிரச்சினைகள் யுத்தம் காரணமாக உருவாகியது என்பதும் யதார்த்தமாகும்
தற்சமயம் யுத்தம் ஓய்ந்து சமாதானம் ஏற்பட்டு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்பும் இக்காணிப்பிரச்சினைகள் தீர்ந்தபாடாயில்லை.இவை தற்போது பூதாகாரமான பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. இந்நிலையில் கிழக்கு மாகாண சபை காணிப்பிணக்கை தீர்ப்பதற்கு நடமாடும் சேவைகளை நடத்த முன்வந்தமை வரவேற்கத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரான்,செங்கலடி,வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி,மண்முனை வடக்கு மற்றும் ஆரையம்பதி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளில் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடமாடும் சேவைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழ்ப்பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை நான் முதலமைச்சர், காணி அமைச்சர் இருவரையும் சந்தித்து இது தவறான செயற்பாடு ஒரு பக்கச்சார்ப்பானது என ஆட்சேபனை தெரிவித்தபோது தமிழ்ப் பகுதிகளிலும் விரைவாக காணிப்பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கபடுமென எனக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரையும் அதனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த காலத்தில் இனவாத அரசுகள் தமிழ் மக்களை பாரபட்சமாக நடத்தி வந்தது போல் இந்த கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பினரும் பார்க்கத் தொடங்கியுள்ளனரா.அல்லது முடமாக்கப்பட்டுவிட்டனரா என சந்தேகிக்கவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள் நிகழும் காணிப்பிரச்சினைகள் பற்றிய பின்வரும் அவதானங்களை இங்கு சுட்டிக்காட்டுவது எனது கடமையாகிறது. பிரதேச செயலாளர்களுக்கு காணி தொடர்பாக பல அதிகாரங்கள் இருந்தும் உரிய முறையில் அவர்கள் அதனைப் பயன்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் மாகாண காணி நிர்வாகம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.
உண்மை அனுமதிப்பத்திரம்,போலி அனுமதிப்பத்திரம் என்ற குழப்பத்தால் வருடாந்த அனுமதிப்பத்திரங்களை திடீரென இரத்துச் செய்தமையால் காணி நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.இவ்வாறான நிலைமை இலங்கையில் எந்த ஒரு மாகாண சபையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தவருமானம் உள்ள ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களுக்கு அளிப்பு உறுதிகள் வழங்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு அரசாங்கம் காணிதொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதற்கமைய மாகாண காணி நிர்வாகம் இன்னும் முனைப்புடன் செயல்படவில்லை.

யுத்த சூழ்நிலையையும் அரசியல் பலத்தையும் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கிரான்,வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுகளில் தனிநபர்கள் அடாத்தாக பிடித்துவருகின்றனர்.இவற்றை கண்டுகொள்ளாமலிருப்பது ஒரு பக்கச்சார்பான நடைமுறையாகும்.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் ஒப்பம் வழங்கப்படாமலும் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் புதுப்பிக்கப்படாமலும் உள்ளன.இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை உள்ளடக்கி தனியான கிரான் பிரதேசசபையை உருவாக்குவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் சில அரசியல் சக்திகள் குறுகிய அரசியல் இலாபம் கருதி அதனைத் தடுக்கமுற்பட்டதால் அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தும் தனிப் பிரதேசசபையினை உருவாக்கித்தருமாறு கோரியும் கடந்தவாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எனவே இப்பகுதி காணிகளை கபளிகரம்செய்யாமல் கிரான் பிரதேச சபையை உடனடியாக அமைக்க வழிவகுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபைக் காணிகள் தொடர்பாக பலதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருமானத்தை ஈட்டக்கூடிய பல வாய்ப்புகள் இருந்தும் அவைபற்றி சிந்திக்காமல் காலம் கடத்துவது மட்டுமல்லாமல் மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது.இந்தவிடயமானது தமிழர் தரப்பை பலவீனமடையச் செய்யும் செயலாகுமெனவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG