அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 22 ஜூன், 2011

ஆணுறையில் மறைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : இலங்கை வாலிபர் கைது

கொ ழும்பில் இருந்து விமானத்தில் திருச்சி சென்ற இலங்கை வாலிபர் ஆணுறையில் தங்கக் கட்டிகளை கடத்தியதால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற விமானத்தில் பயணி ஒருவர் தங்க பிஸ்கட்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருச்சி விமான நிலையங்களில் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர்.
கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையம் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், இலங்கையைச் சேர்ந்த வாலிபர் முகமது நஜிமுன் என்ற பயணியை ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் சந்தேகப்படும்படியான பொருள் இருந்தது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து டாக்டர்கள் மூலம் உள்ளே இருந்த பொருளை வெளியே எடுத்தனர். ஆணுறைக்குள், 12 தங்க பிஸ்கட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரித்தனர். நேற்று அவரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG