அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 22 ஜூன், 2011

லோக்பால் மசோதா தொடர்பாக ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

லோ க்பால் மசோதா குறித்து ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள வரைவு மசோதா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
லோக்பால் மசோதா தொடர்பாக அரசுக்கும், சிவில் சமூகத்திற்கும் இடையே 9 முறை கூட்டங்கள், ஆலோசனைகள் நடந்தன. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டமுமம் தோல்வியிலேயே முடிந்தது. இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்ததாக அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG