அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 14 ஜூன், 2011

கப்பல் போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டும்

மிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் திட்டமானது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கள் கிழமையன்றுதான் இத் திட்டம் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. துவக்க விழாவில் மாநில அரசு அதிகாரிகளும், அதிமுக எம் எல் ஏ வும் கலந்து கொள்ளவில்லை.
தூத்துக் குடியிலிருந்து திங்கள் மாலை புறப்பட்ட கப்பல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு சென்றடைந்துள்ளது.
அதேபோல இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.

ப சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்

மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முறை கேடாக ஜெயித்தார் என்றும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தற்போது டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

"சிதம்பரம் தேர்தலில் ஜெயிக்கவில்லை. உண்மையில் தேர்தலில் ஜெயித்தது எங்கள் கட்சி வேட்பாளர்தான். சிதம்பரம் தற்போது நாட்டை ஏமாற்றுகிறார்". என்றார் முதல்வர் ஜெயலலிதா.

தேர்தல் முடிவுகள் குறித்த விபரங்களை கணினியில் பதிவு செய்யும் நபர் செய்த மோசடியால் சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் ஜெயலலிதா கூறினார். இது தொடர்பான ஒரு வழக்கு ஏற்கனவே அதிமுக சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதே போல 2ஜி வழக்கில் தற்போது குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால், அவரை பிரதமர் விலக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக பிரதமர் மன் மோகன் சிங் அவர்களைச் சந்தித்த ஜெயலலிதா, தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி உறவு பேணும் நிலையில் தாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது முறையாக இருக்காது என்றும் முதல்வர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG