அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 14 ஜூன், 2011

கதிர்காமர் கொலைச் சதி குறித்து தகவல் கொடுக்காததால் வழக்கு

மு ன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கான சதியை பொலிஸாருக்கு வேண்டுமென்றே தெரிவிக்க தவறிய மேல்மாகாண மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளர் மீது சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நடராசா சிவராசா அல்லது அம்பலவன் என்பவரை கொழும்பு மேல் நீதிமன்றில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளியாக நிறுத்தியுள்ளார்.
பாஸ்கரன் என்று அழைக்கப்படும் ஒருவர் அப்போதைய வெளிநாட்டமைச்சரான லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்யும் நோக்கில் வேலைக்கமர்த்துவதற்கு பொருத்தமான ஒரு நபரை 2005, ஜனவரி 5 – டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் தேடிக்கொண்டிருந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தும் அதை பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என நடராசா சிவராசா மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த தகவலை வேண்டுமென்றே பொலிஸாரிடமிருந்து மறைத்தமை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியது என சட்டமா அதிபர் கூறினார்.
முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொழும்பு – 7, புல்லர்ஸ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG