அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 22 ஜூன், 2011

கமல் படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் இஷா?

மல் ஹாஸன் நடித்து இயக்கும் புதிய படம் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் இஷா ஷெர்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக முதலில் ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் இப்போது ஸ்ரேயா வேண்டாம் என கமல்ஹாஸனே கூறிவிட்டதாகத் தெரிகிறது. ஸ்ரேயாவுக்கு கதக் நடனம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஸ்வரூபம் யூனிட்டைச் சேர்ந்த ஒருவர் கூறினார். ஆனால் எதனால் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்று வெளிப்படையாக கூறவில்லை.
இப்போது ஸ்ரேயாவுக்கு பதில் இஷா ஷெர்வானியை ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த இஷா ஏற்கெனவே லக் பை சான்ஸ் மற்றும் கிஸ்னா படங்களில் நடித்தவர்.
டெலிபோட்டோ பிலிம்ஸ் தயாரிக்கும் விஸ்வரூபம் படத்துக்கு சங்கர் - எஸான் - லாய் இசையமைக்கிறார்கள். ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்குகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG