அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 21 ஜூன், 2011

தகவல் உரிமை சட்டமூலம் நிராகரிப்பு

லங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியகட்சியால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த சட்டமூலம் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக இந்த சட்ட மூலத்தை ஆதரித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இச்சமயத்தில் குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் சட்ட முன்வரைவில் உள்ள அனைத்து அம்சங்களையும் ரணில் படிக்க அனுமதி அளிக்க முடியாது என்றார்.
பிறகு இது குறித்து அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மசோதாவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்கள் வாக்கெடுத்தனர். எதிராக 97 பேர் வாக்களித்தனர்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG